Tuesday, September 6, 2011

மின்மினிக்கு சில மின்னஞ்சல்கள் - ஒரு குறுங்கதை by Vaz

Aug 1.
 ஹாய்  மின்மினி 

இன்றுதான் நீங்கள் எனக்கு செக்ரட்டரியாக சேர்ந்து இருக்கிறீர்கள். Welcome to my office. முதல் நாளிலேயே உங்கள் திறமை பற்றி நன்றாக தெரிந்து விட்டது.   சின்சியராக வேலை செய்தல் நமது கம்பெனியில் சீக்கிரமாக முன்னுக்கு வர முடியும்.
 
PS: உங்களக்கு அந்த மஞ்சள் சுடிதார் மிக நன்றாக பொருந்துகிறது.
சரவணன்

==========================================================
Aug 8

டியர்
மின்மினி,
 

நீங்கள் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. அதற்குள் எல்லா நெளிவு சுளிவுகளையும் கற்று விட்டீர்கள். இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியுமா என்ன ? கீப் இட் அப். இன்று இரவு ஹோட்டல் ஷெரட்டனில் ஆபீஸ் dinner உள்ளது என்று சொன்னேன் அல்லவா? அப்பொழுது உன்னிடம் ( உரிமை எடுத்து கொண்டு வா போ என்கிறேன்) நிறைய பேச வேண்டும்.
 


சரவணன்
================================================================
Aug 9

அன்பு
மின்மினி,
  

நேற்று dinner எனக்கு புது அனுபவம். உன்னை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நமக்கு frequency நன்றாக ஒத்து போகிறது என்று நினைக்கிறன். என் மனைவி நிலா பற்றி உன்னிடம் பகிர்ந்து கொண்டேன் அல்லவா? என்ன செய்வது, அவளை காதல் கல்யாணம்தான் செய்து கொண்டேன். அவள் அப்பா பெரிய industrialist ஆக இருந்தாலும் அவருக்கு ஒரே மகள் என்பதால் சம்மதித்து விட்டார். அதனால்தான் நான் இந்த கம்பனிக்கு MD ஆக முடிந்தது. ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவள் உண்மையான உருவம் தெரிந்தது. எதற்கு எடுத்தாலும் சந்தேகம். ஒரு நாள் லேட்டாக போனாலும் "எங்க போனே, எவ கூட இருந்த ன்னு" ஒரே சண்டை. கல்யாணம் ஆன ஆறு மாசத்திலேயே கசந்து விட்டது மின்மினி. ஏதோ உன்னிடம் எல்லாம் சொல்ல வேண்டும் போல இருந்ததால் சொல்லிவிட்டேன்.
 

சரவணன்

================================
Oct 1
ஸ்வீட் மின்மினி

 
நீ
வந்து சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. நாம் இருவரும் மிகவும் நெருங்கி விட்டோம் என்று நினைக்கிறன். இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நேரில் சொல்ல எனக்கு முடியவில்லை. I think I have fallen in love with you ! நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்.
 

வித் லவ்,  
சரவணன்
===================

Feb 2.

டார்லிங்
,
 

என் காதலை நீ ஏற்றுக்கொண்டது மிக மிக மகிழ்ச்சி. ஆகா. இந்த நான்கு மாதங்கள் போன இடம் தெரியவில்லை. I love you so much. உனக்கு அபார்ட்மென்ட் இருப்பது நாம் சந்திப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கின்றது. இருந்தாலும் அந்த ராட்சசி நிலா விற்கு தெரியாமல் கவனமாக இருக்க வேண்டும். இனி வாழும் நாட்கள் உன்னோடுதான் என்ற முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் என் மனைவியை எப்படி விலக்குவது? அதுவும் சொத்து முழுவதும் அவள் பெயரில் வேறு இருக்கிறது. யோசிக்க வேண்டும். கவனமாக. நீ கேட்ட வைர பதித்த மோதிரம் ஆர்டர் செய்துவிட்டேன். சந்தோசம்தானே?
 

லவ்,  
சரவணன்
=============

Mar 15
.  

ஸ்வீட் ஹார்ட்,
 

நாம் பேசிகொண்டது போல, ஒரு முடிவிற்கு வந்துவிட்டேன். நேற்று அவளுடன் திரும்பவும் சண்டை. நமது விஷயம் அவளுக்கு தெரிந்து விட்டதோ என்று ஒரு சந்தேகம். இனி மேல் என்னால் பொறுக்க முடியாது. அவள் உலகத்தை விட்டு செல்லவேண்டும். ஆனால் என் மேல் சந்தேகம் ஏற்படக்கூடாது. அப்பொழுதுதான் சொத்தும் நம் கையிலிருந்து போகாது. யோசிக்கிறேன். 

PS ;உன் பெயரில் ஒரு Santro கார் புக் பண்ணி விட்டேன் செல்லம்.
சரவணன

 ===========================

Mar 20
 

அன்பே,
உன்னிடம்
கூறியது போல எல்லாம் செட் பண்ணி விட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வாடகை கொலைகாரனை கண்டுபிடித்தேன். ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டான். இன்று நள்ளிரவு அவன் திருடன் போல வீட்டுக்குள் நுழைவான். பின்பக்க கதவை தாழ் போடாமல் வைத்து இருப்பேன். அவன் பெட்ரூமிற்குள் நுழையும்பொழுது நான் எழுந்து சத்தம் போட்டு பின்பு நிலாவையும் எழுப்புவேன். அப்பொழுது தப்பிப்பதற்காக என்னை தாக்கி விட்டு அவளை கொன்று விட்டு ஓடிவிடுவான். பிளான் இதுதான். ஒரு முறை ஒத்திகை கூட பார்த்து விட்டோம். அதன் பின் அவன் ஊரை விட்டு தலைமறைவாகிவிடுவான். போலீஸ்-இடம் அழுது புலம்பி நடிக்க வேண்டும். அவள் அப்பாவிடம் நம்ப வைக்க வேண்டும். அதை நான் பார்த்து கொள்கிறேன். அவளோடு இருக்கும் நரக வாழ்க்கைக்கு சிறிது நாள் நடிப்பது எவ்வளோவோ மேல். சில நாட்களுக்கு பிறகு சமயம் பார்த்து நாம் சேரலாம் கண்ணே.இந்த

PS:
திட்டம் நிறைவேற பிரார்த்தனை செய். நாளை நல்ல செய்தி சொல்கிறேன். நான் அனுப்பிய எல்லா மின்னஞ்சல்களையும் அழித்துவிடு. நீ ஆசையுடன் கேட்ட Platinum நெக்லஸ் ரெடியாக உள்ளது.
காதலுடன
சரவணன்
===================================================

Mar 21
.

மின்மினி,
 
நீ
எதிர்பார்த்த செய்தி கேட்காமல் ஏமாந்து இருப்பாய். அதற்கு என்னை மன்னித்து விடு. ஆம் நான் காதல் கொண்டுதான் சரவணனை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அதற்கு பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு ஸ்திரீலோலன் என்று. உன்னையும் சேர்த்து அவனுக்கு பல பெண் தோழிகள்/துணைவிகள் உண்டு. அதை கூட நான் பொறுத்து வந்தேன். ஆனால் எப்பொழுது என்னை கொலை செய்யும் அளவிற்கு சென்றானோ, அப்பொழுதே அவன் மேல் நான் கொண்ட காதல் செத்து விட்டது. தீர்மானித்து விட்டேன், அவன் இந்த உலகத்தில் இருக்க கூடாது என்று. அவன் மெயில் பாஸ்வேர்ட்ஹாக் செய்து தெரிந்து கொண்டேன். அவன் திட்டம் பற்றியும் தெரிந்து கொண்டேன். பிறகு, என் பிடிவாதத்தால் வேறு வழி எங்கள் திருமணத்திற்கு சம்மதித்த என் அப்பாவிடம் சென்று நின்றேன். அழுதேன். என்னை தேற்றிய அவர், அவன் மேல் எனக்கு இனி ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டார். அப்புறம் என்ன, அதே வாடகை கொலையாளி. இம்முறை பணம் இருபது லட்சம். அதே திட்டம்தான். ஆனால் victim
மட்டும் வேறு. சரவணன் செய்த பிளான் அவனுக்கே எதிராக மாறிவிட்டது பார்த்தாயா. அதுதான் விதி. சொல்ல மறந்துவிட்டேனே, இந்த மெயில் கூட நீ படித்திருக்கக்கூடிய வாய்புகள் குறைவு. இருபது லட்சம் என்ற தொகை உனக்கும் சேர்த்துதான் கண்மணி. நரகத்தில் சென்று ஒன்று சேருங்கள்!
குட்
பை.


PS: அந்த Platinum நெக்லஸ் என் கழுத்துக்கு நன்றாகவே உள்ளது. நன்றி.
வெறுப்புடன்
,

நிலா

-----------------------------------**END**----------------------------------------.
.