Tuesday, March 8, 2011

"Happy Anniversary ..... "

அடுப்பிலிருந்த cooker "வீல் " என விசில் அடித்து கூப்பிட, வெங்காயம் நறுக்கி கொண்டிருந்த ஆஷா அவசரமாக நெருப்பை குறைத்து சிம்மில் வைத்தாள்.  அன்று அஜ்மல்லுக்கும் ஆஷாவிற்கும் முதலாவது திருமண நாள்.   அஜ்மல் வெளிய டின்னெர் செல்லலாம் என்று சொல்லியும், ஆஷா பிடிவாதமாக நான்தான் சமைப்பேன் என்று அடம் பிடித்து நிற்க, ஏதோ செய் என அவனும் ஆபீஸ் சென்றுவிட்டான்.

அபார்ட்மென்ட் முழுக்க non veg சமையல் வாசம், சில்லி சிக்கன், சிக்கன் பிரியாணி, சிக்கன் ப்ரை என அஜ்மலுக்கு பிடித்த உணவு வகைகள் உணவு மேஜையில் நிறைந்தன.   கடைசியாக ராயதாவிற்கு வெங்காயத்துடன் தயிரை கலந்து வைத்த ஆஷா, "ஹப்பாடா" என மின்விசிறி காற்றில் சிறிது ஓய்வெடுத்தாள்.

"இன்னைக்கு candle light  செட் பண்ணி அவரை அசத்திடனும்" என்று வரவேற்பறையால் இருந்த மேஜையை அலங்கரிக்க ஆரம்பித்தாள்.

"என்ன இன்னைக்கு 6 மணிக்கே வர சொன்னேன்.  இன்னைக்காவது நேரத்தில வர்றார இந்த மனுஷன்" என்று அலுத்துக்கொண்டு சுவர்கடிகாரத்தை பார்த்தாள்.

மணி இரவு 7:30.
========================================


பைக்கில் Apartment நோக்கி விரைந்து கொண்டிருந்தான் அஜ்மல்.  கிளம்பும்போது பார்த்து "அஜ்மல். இந்த ஒரு லெட்டர் மட்டும் டிராப்ட் பண்ணிடுங்க .. இன்னைக்கு ஹெட் ஆபீஸ் அனுப்பனும் " என்று சொன்ன மேனேஜர்-ஐ  மானசிகமாக சாபமிட்டுகொண்டு அச்செலேரடோரை திருகினான் அஜ்மல். 

அவன் சட்டை பாக்கெட்டில் ஆஷா-விற்காக ஆசையாக வாங்கிய வைர மோதிரம் ஒரு சிறிய gift box உள்ளே உறங்கிகொண்டிருந்தது.  மூன்று மாதங்களுக்கான incentive சேர்த்து வைத்து வாங்கி இருந்தான்.   திருமணமான பிறகு அவளுக்கு பெரிதாக எதுவும் வாங்கி கொடுத்தது இல்லை என அவனுக்குள் ஒரு உறுத்தல் இருந்து வந்தது.  இன்று சரி ஆகி விடும், "ஆஷா darling .. இதோ வருகிறேன் .. இதை பார்த்ததும் உன் முகத்தில் ஏற்படும் சந்தோசத்தை நான் பார்க்க வேண்டும்" என நினைத்தபடி ஒரு பேருந்தை லாவகமாக கட் அடித்து கடந்தான்.

அவன் கைகடிகாரத்தில் நேரம் 8:00.

=========================================

ஆஷா புதிய புடவையை அணிந்து wardrobe கண்ணாடி முன்னால் நின்று மேக் அப் செய்து கொன்டிருந்தாள்.  அஜ்மலுக்கு பிடித்த கருப்பு நிற சாரி.  மற்றும் அவனுக்கு வாங்கிய புதிய titan watch  பரிசு பளபளப்பான பரிசு பெட்டியுனுள் காத்திருந்தது.

"என்ன இன்னும் காணோம்.. போன் பண்ணி பாக்கலாமா " என யோசித்து செல்போன் எங்கே என்று அவள் கண்கள் அலைபாய்ந்தது.  "சரி வேண்டாம், ட்ரிவிங்கில் இருப்பார்.. " என மனதை தேற்றிக்கொண்டு டிவி முன் அமர்ந்து சேனல்களை மற்ற ஆரம்பித்தாள்.  ஆனால் மனம் அதில் போகவில்லை.

உடனே எழுந்து டைனிங் டேபிளில் மெழுகுவர்த்திகளை ரெடியாக எடுத்து பொருத்துவதற்கு எதுவாக வைத்தாள்...  அப்போது வாசல் மணி சிணுங்கியது. " டிங் டிங் "...

மணி 815.

=============================================

ஓடி சென்று கதவை திறந்த ஆஷா .....

அஜ்மல் நின்றுகொண்டிருந்தான் ...  சின்ன புன்னகையுடன் ...

"என்னங்க இன்னைக்காவது நேரத்திலே வரலாமில்ல"  என்று சிரித்த ஆஷா... "சரி வாங்க "  என திரும்பி நடக்க ...

உள்ளே வந்த அஜ்மல் ...

அங்கேயே நின்று அவளை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான் ...

பின் தொடர்ந்து அஜ்மல் வராததால் .. திரும்பிய ஆஷா .. "என்னங்க .. சீக்கிரம் வந்து பிரெஷ் ஆகுங்க.. சாப்பாடு ஆறி போய்டும் .. " என சொல்ல..

அஜ்மல் மெதுவாக அவள் அருகில் வர...

"என்னங்க ... உடம்பு சரி இல்லையா என்ன.."  என்று வாஞ்சையுடன் அவனை நெருங்கினாள்..

"ஹேப்பி அன்னிவேர்சரி .. மை டியர் ஆஷா " என்று அஜ்மல் நீட்டிய கையில் .. ஒரு gift box ஜிகினா அப்பிய காகிதத்தில் மின்னியது.

அப்போது "என் இனிய பொன் நிலவே" யின் கிதார் நாதம் செல்போனின் ரிங்க்டோன் ஆக சிணுங்கியது ..

"இது வேற.. ஒரு நிமிஷம் டியர்"  என போன் எங்கே என தேடிய ஆஷாவின் கண்கள். . சமையல் அறையிலுள் இருக்கிறது என உறைக்க.. ஓடி சென்று தேடி... ப்ரிஜ் மீது இருந்த போனை தேடி பிடித்து எடுத்தாள்.

தெரியாத ஒரு நம்பர் டிஸ்ப்ளே வில் மிளிர.. காதில் பொருத்தி "ஹலோ " என்றாள்..

கனமான ஒரு குரல் "மேடம்.. .. நாங்க ஹைவே போலீஸ் பேசுறோம்.  இங்க ஒரு விபத்து நடந்து இருக்கு.   ஸ்பாட்ல கிடந்த செல்போன்-ல உங்க நம்பர் wife ஸ்டோர் ஆகி இருந்தது. பைக் ல வந்த நபர் ஒருவர் லாரில அடிச்சு அங்கயே.. ...  மேடம் மேடம் ........"

ஆஷாவிற்கு தலை சுற்ற, கையில் இருந்த போன் நழுவி விழுந்தது..  அவள் ஓடி கிச்சனை விட்டு வெளிய வந்து பார்க்க .....

அங்கே ஹாலில் ....

யாரும் இல்லை.

மேஜை மேல் கவர் பிரிக்கப்பட்ட பெட்டியில் ஓர் வைர மோதிரம் மட்டும் அவளை பார்த்து சிரித்தது

மணி 845 .....................

END


No comments:

Post a Comment