முகத்தில்
அறையும் காலை பனிதுளி
வேகமாக
பார்வையில் பட்டும் கரையும் காடுமேடுகள்
தென்னைமர
உச்சியில் ஒளிந்து கண்ணடிக்கும் சூரிய கதிர்கள்
ரயில்பெட்டியில் தூர
ஒலிக்கும் செல்போனில் இளையராஜா பாடல்
பிளாஸ்டிக்
பேகிங்க்கில் ருசியில்லாத ரயில் இட்லி வடை
திடீர்
பிரவேசம் செய்யும் திருநங்கைகளின் கெஞ்சல்கள்
பத்து ரூபாய்க்கு
நாலு பொருள் விற்பனை செய்யும் கண் இழந்தோர்
நான்கு
குழந்தைங்களுடன் ஒரு கைக்குழந்தை சேர்த்து ரிசர்வ்ட் பெட்டியில் ஏறிய ஏழை தாய்
அரசியல் விவாதம்
செய்யும் பெரியவர்கள்
ஓசி பேப்பர் ஒய்யாரமாக
படிக்கும் டிக்கெட் எடுக்காத கனவான்
யாரும் வாங்கா
விட்டாலும் விடாமல் வடை கூவி விற்பனை செய்யும் ரயில் ஊழியர்
பாத்ரூம் அருகே
படுக்கை விரிக்கும் இந்நாட்டு ராஜாக்கள்
டேபிலேட்-இல்
டெம்பில் ரன் விளையாடும் காலேஜ் மாணவன்
ஏக்கமாக அதை
பார்க்கும் மருத்துவ பிரதிநிதி
இன்னும் பன்முக மனிதர்களை
அறிமுகம் செய்யும் இண்டர்சிட்டி பயணம் .......
நமது சோகங்களை சல்லடையாக்கி
வாழ்க்கை பெரிது என உணர்த்துகிறது ...