Friday, October 17, 2014

புகைவண்டி பார்வை

         

          தூர ஒலிக்கும் எஞ்சினின் சோககூவல்
          முகத்தில் அறையும் காலை பனிதுளி
          வேகமாக பார்வையில் பட்டும் கரையும்                                  காடுமேடுகள்
          தென்னைமர உச்சியில் ஒளிந்து கண்ணடிக்கும் சூரிய கதிர்கள்
ரயில்பெட்டியில் தூர ஒலிக்கும் செல்போனில் இளையராஜா பாடல்
           பிளாஸ்டிக் பேகிங்க்கில் ருசியில்லாத ரயில் இட்லி வடை
           திடீர் பிரவேசம் செய்யும் திருநங்கைகளின் கெஞ்சல்கள்
பத்து ரூபாய்க்கு நாலு பொருள் விற்பனை செய்யும் கண் இழந்தோர்
நான்கு குழந்தைங்களுடன் ஒரு கைக்குழந்தை சேர்த்து ரிசர்வ்ட் பெட்டியில் ஏறிய ஏழை தாய்
அரசியல் விவாதம் செய்யும் பெரியவர்கள்
ஓசி பேப்பர் ஒய்யாரமாக படிக்கும் டிக்கெட் எடுக்காத கனவான்
யாரும் வாங்கா விட்டாலும் விடாமல் வடை கூவி விற்பனை செய்யும் ரயில் ஊழியர்
பாத்ரூம் அருகே படுக்கை விரிக்கும் இந்நாட்டு ராஜாக்கள்
டேபிலேட்-இல் டெம்பில் ரன் விளையாடும் காலேஜ் மாணவன்
ஏக்கமாக அதை பார்க்கும் மருத்துவ பிரதிநிதி
இன்னும் பன்முக மனிதர்களை அறிமுகம் செய்யும் இண்டர்சிட்டி பயணம் .......
நமது சோகங்களை சல்லடையாக்கி வாழ்க்கை பெரிது என உணர்த்துகிறது ...



No comments:

Post a Comment