Thursday, October 27, 2011

Petchi - The film


For those of you who enjoyed my short story Petchi from the blog, please be ready to watch it in a short film format.  Written and directed and adapted for screen by Ram and with the able technical team from Nalayan Iyakkunar, Sujith Sarang and company.  More on this soon!

Monday, October 3, 2011

Engeyum Eppothum - A Quikreview Vaz



Great debut effort by M Saravanan, the protege proves his mettle with swift storytelling, natural characters, non linear narrative, excellent SFX for a tamil movie, breezy songs and an above average BGM. All actors have played their role to the hilt. And the director has weaved in multiple stories with equal importance with the RTA (road traffic accident, medical jargon) being the pivotal incident. Kudos to the team, Mr. ARM for supporting and Fox Studios for their maiden venture in Kollywood. A must watch for meaningful cinema fans,  meriting multiple views. A commercial flick with a message!

Tuesday, September 6, 2011

மின்மினிக்கு சில மின்னஞ்சல்கள் - ஒரு குறுங்கதை by Vaz

Aug 1.
 ஹாய்  மின்மினி 

இன்றுதான் நீங்கள் எனக்கு செக்ரட்டரியாக சேர்ந்து இருக்கிறீர்கள். Welcome to my office. முதல் நாளிலேயே உங்கள் திறமை பற்றி நன்றாக தெரிந்து விட்டது.   சின்சியராக வேலை செய்தல் நமது கம்பெனியில் சீக்கிரமாக முன்னுக்கு வர முடியும்.
 
PS: உங்களக்கு அந்த மஞ்சள் சுடிதார் மிக நன்றாக பொருந்துகிறது.
சரவணன்

==========================================================
Aug 8

டியர்
மின்மினி,
 

நீங்கள் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது. அதற்குள் எல்லா நெளிவு சுளிவுகளையும் கற்று விட்டீர்கள். இவ்வளவு சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியுமா என்ன ? கீப் இட் அப். இன்று இரவு ஹோட்டல் ஷெரட்டனில் ஆபீஸ் dinner உள்ளது என்று சொன்னேன் அல்லவா? அப்பொழுது உன்னிடம் ( உரிமை எடுத்து கொண்டு வா போ என்கிறேன்) நிறைய பேச வேண்டும்.
 


சரவணன்
================================================================
Aug 9

அன்பு
மின்மினி,
  

நேற்று dinner எனக்கு புது அனுபவம். உன்னை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன். நமக்கு frequency நன்றாக ஒத்து போகிறது என்று நினைக்கிறன். என் மனைவி நிலா பற்றி உன்னிடம் பகிர்ந்து கொண்டேன் அல்லவா? என்ன செய்வது, அவளை காதல் கல்யாணம்தான் செய்து கொண்டேன். அவள் அப்பா பெரிய industrialist ஆக இருந்தாலும் அவருக்கு ஒரே மகள் என்பதால் சம்மதித்து விட்டார். அதனால்தான் நான் இந்த கம்பனிக்கு MD ஆக முடிந்தது. ஆனால் கல்யாணம் செய்து கொண்ட பின்புதான் அவள் உண்மையான உருவம் தெரிந்தது. எதற்கு எடுத்தாலும் சந்தேகம். ஒரு நாள் லேட்டாக போனாலும் "எங்க போனே, எவ கூட இருந்த ன்னு" ஒரே சண்டை. கல்யாணம் ஆன ஆறு மாசத்திலேயே கசந்து விட்டது மின்மினி. ஏதோ உன்னிடம் எல்லாம் சொல்ல வேண்டும் போல இருந்ததால் சொல்லிவிட்டேன்.
 

சரவணன்

================================
Oct 1
ஸ்வீட் மின்மினி

 
நீ
வந்து சேர்ந்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டன. நாம் இருவரும் மிகவும் நெருங்கி விட்டோம் என்று நினைக்கிறன். இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. நேரில் சொல்ல எனக்கு முடியவில்லை. I think I have fallen in love with you ! நீ புரிந்து கொள்வாய் என்று நம்புகிறேன்.
 

வித் லவ்,  
சரவணன்
===================

Feb 2.

டார்லிங்
,
 

என் காதலை நீ ஏற்றுக்கொண்டது மிக மிக மகிழ்ச்சி. ஆகா. இந்த நான்கு மாதங்கள் போன இடம் தெரியவில்லை. I love you so much. உனக்கு அபார்ட்மென்ட் இருப்பது நாம் சந்திப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கின்றது. இருந்தாலும் அந்த ராட்சசி நிலா விற்கு தெரியாமல் கவனமாக இருக்க வேண்டும். இனி வாழும் நாட்கள் உன்னோடுதான் என்ற முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் என் மனைவியை எப்படி விலக்குவது? அதுவும் சொத்து முழுவதும் அவள் பெயரில் வேறு இருக்கிறது. யோசிக்க வேண்டும். கவனமாக. நீ கேட்ட வைர பதித்த மோதிரம் ஆர்டர் செய்துவிட்டேன். சந்தோசம்தானே?
 

லவ்,  
சரவணன்
=============

Mar 15
.  

ஸ்வீட் ஹார்ட்,
 

நாம் பேசிகொண்டது போல, ஒரு முடிவிற்கு வந்துவிட்டேன். நேற்று அவளுடன் திரும்பவும் சண்டை. நமது விஷயம் அவளுக்கு தெரிந்து விட்டதோ என்று ஒரு சந்தேகம். இனி மேல் என்னால் பொறுக்க முடியாது. அவள் உலகத்தை விட்டு செல்லவேண்டும். ஆனால் என் மேல் சந்தேகம் ஏற்படக்கூடாது. அப்பொழுதுதான் சொத்தும் நம் கையிலிருந்து போகாது. யோசிக்கிறேன். 

PS ;உன் பெயரில் ஒரு Santro கார் புக் பண்ணி விட்டேன் செல்லம்.
சரவணன

 ===========================

Mar 20
 

அன்பே,
உன்னிடம்
கூறியது போல எல்லாம் செட் பண்ணி விட்டேன். மிகவும் கஷ்டப்பட்டு ஒரு வாடகை கொலைகாரனை கண்டுபிடித்தேன். ஐந்து லட்சம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டான். இன்று நள்ளிரவு அவன் திருடன் போல வீட்டுக்குள் நுழைவான். பின்பக்க கதவை தாழ் போடாமல் வைத்து இருப்பேன். அவன் பெட்ரூமிற்குள் நுழையும்பொழுது நான் எழுந்து சத்தம் போட்டு பின்பு நிலாவையும் எழுப்புவேன். அப்பொழுது தப்பிப்பதற்காக என்னை தாக்கி விட்டு அவளை கொன்று விட்டு ஓடிவிடுவான். பிளான் இதுதான். ஒரு முறை ஒத்திகை கூட பார்த்து விட்டோம். அதன் பின் அவன் ஊரை விட்டு தலைமறைவாகிவிடுவான். போலீஸ்-இடம் அழுது புலம்பி நடிக்க வேண்டும். அவள் அப்பாவிடம் நம்ப வைக்க வேண்டும். அதை நான் பார்த்து கொள்கிறேன். அவளோடு இருக்கும் நரக வாழ்க்கைக்கு சிறிது நாள் நடிப்பது எவ்வளோவோ மேல். சில நாட்களுக்கு பிறகு சமயம் பார்த்து நாம் சேரலாம் கண்ணே.இந்த

PS:
திட்டம் நிறைவேற பிரார்த்தனை செய். நாளை நல்ல செய்தி சொல்கிறேன். நான் அனுப்பிய எல்லா மின்னஞ்சல்களையும் அழித்துவிடு. நீ ஆசையுடன் கேட்ட Platinum நெக்லஸ் ரெடியாக உள்ளது.
காதலுடன
சரவணன்
===================================================

Mar 21
.

மின்மினி,
 
நீ
எதிர்பார்த்த செய்தி கேட்காமல் ஏமாந்து இருப்பாய். அதற்கு என்னை மன்னித்து விடு. ஆம் நான் காதல் கொண்டுதான் சரவணனை திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அதற்கு பிறகுதான் தெரிந்தது அவன் ஒரு ஸ்திரீலோலன் என்று. உன்னையும் சேர்த்து அவனுக்கு பல பெண் தோழிகள்/துணைவிகள் உண்டு. அதை கூட நான் பொறுத்து வந்தேன். ஆனால் எப்பொழுது என்னை கொலை செய்யும் அளவிற்கு சென்றானோ, அப்பொழுதே அவன் மேல் நான் கொண்ட காதல் செத்து விட்டது. தீர்மானித்து விட்டேன், அவன் இந்த உலகத்தில் இருக்க கூடாது என்று. அவன் மெயில் பாஸ்வேர்ட்ஹாக் செய்து தெரிந்து கொண்டேன். அவன் திட்டம் பற்றியும் தெரிந்து கொண்டேன். பிறகு, என் பிடிவாதத்தால் வேறு வழி எங்கள் திருமணத்திற்கு சம்மதித்த என் அப்பாவிடம் சென்று நின்றேன். அழுதேன். என்னை தேற்றிய அவர், அவன் மேல் எனக்கு இனி ஒன்றும் இல்லை என்று தெரிந்து கொண்டார். அப்புறம் என்ன, அதே வாடகை கொலையாளி. இம்முறை பணம் இருபது லட்சம். அதே திட்டம்தான். ஆனால் victim
மட்டும் வேறு. சரவணன் செய்த பிளான் அவனுக்கே எதிராக மாறிவிட்டது பார்த்தாயா. அதுதான் விதி. சொல்ல மறந்துவிட்டேனே, இந்த மெயில் கூட நீ படித்திருக்கக்கூடிய வாய்புகள் குறைவு. இருபது லட்சம் என்ற தொகை உனக்கும் சேர்த்துதான் கண்மணி. நரகத்தில் சென்று ஒன்று சேருங்கள்!
குட்
பை.


PS: அந்த Platinum நெக்லஸ் என் கழுத்துக்கு நன்றாகவே உள்ளது. நன்றி.
வெறுப்புடன்
,

நிலா

-----------------------------------**END**----------------------------------------



.
.

Wednesday, August 17, 2011

LOOOOOOOOOOOOOOOOOOOOOONGEST WORDS in ENGLISH!




The 13 LONGEST WORDS In The English Language ...try pronoucing them......!
 

13. Honorificabilitudinita - Tibus (27 letters)

The word occurs in Shakespeare's play Love's Labour's Lost, and mens "with honorablenesses." It can also be viewed as a rearrangement of the Latin sentence "Hi ludi F. Baconis nati tuiti orbi", meaning: "Tese plays, F.Bacon's offspring, are preserved for the world. This twist has been used to support the"Baconian theory" that Francis Bacon wrote Shakespeare's plays.
However, in The Shakespearean Ciphers Examined (Cambridge, England: Cambridge University Press, 1957), William F. and Elizebeth S. Friedman have similar anagrams that "prove" Theodore Roosevelt, Lewis Carroll, and Gertrude Stein also wrote Shakespeare.

12. Antidisestablishmentarianism(28 letters)
The word means, according Funk & Wagnalls New Standard Dictionary of the English Language, "a doctrine of opposition to disestablishment (withdrawal of state patronage, support, or exclusive recognition from a church)". 
It is said to have been used once by British Prime Minister William
Ewart Gladstone (1809 - 1898).

11. Floccinaucinihilipipification (29 letters)
This is found in the Oxford English Dictionary, and means "the action or habit of estimating something as worthless".

10. Supercalifragilisticeplalidocious (34 letters)
From the movie Mary Poppins. It means "god".

9. Praetertranssubstantiationalistically (37 letters)
Used by Mark McShane in his novel Untimely Ripped (1963). It means the act of surpassing the act of transubstantiation, which refers specifically to the transformation of the bread and wine into the body and blood of Christ during the Roman Catholic mass.

8. Hepaticocholecystostcholecystenterostomy(40 letters)
Found in Gould's Medical Dictionary. It is defined as "the surgical formation of a passage between the gall bladder and hepatic duct, on the one hand, andbetween the intestine and he gall bladder, on the other".

7. Pneumonoultramicroscopicsilicovolcanoconiosts
(45 letters)
Found in Webster's New Collegiate Dictionary, 8th edition. It is "a
pneumoconiosis caused by the inhalation of very fine silicate or quartz dust". It occurs especially in miners.

6. Antipericatametaanaparcircumvolutiorectumgustpoops
of the coprofied (50 letters)
The title of a book on a shelf in a library in the classic ribald work Gargantua and Pantagruel, by Francois Rabelais.

5. Osseocarnisanguineoviscericartilagininervomedullary  
(51 letters)
A team that describes the structure of the human body; it occurs in Heading Hall (1861), a novel by Thomas Love Peacock.

4. Aequeosalinocalcalinoceraceoaluminoscupreovitriolic
(52 letters) 
Describes the composition of the spa wters at Bristol, in Gloucestershire, England. The word was coined by an English medical writer, Dr. Edward Strother (1675 - 1737).

3.Bababadalgharaghtakamminapronnkonnbronntonnepronnt-
uonnthunntrovarrhounawnskawntoohoohoordeenenthurnuk  
(100 letters)
This word is on the first pate of Finegans Wake by James Joyce, and is a symbolic thunderclap representing the fall of Adam and Eve. (Other 100-letter  words appear throughout the book.)

2. Lopadotemachoselachogaleokranioleipsanodrimhypotrim-
matosilphiparaomelitokatakechymenokichlepikossyphophat-
toperisteralektryonoptekephalliokiglopeleiolagoiosiraiobaph-
etraganopterygon (182 letters)
The English transliteration of a Greek word that occurs in Aristophanes' play The Ecclesiazusae. The word is defined a "a goulash composed of all the leftovers from the meals of the last two weeks", or "has". A more, detailed translation is
"plattero-filletomulleti-turboto-cranio-morselo-
pickleo-acido-silphio-honeyo-poured on the top of theouzelo-throstleo-cushato-culvero-roastingo-
marrowo-dippero-levereto-syrupo-gibleto-wings.

1. (3,600 letters)
A chemical name describing bovine NADP - specific glutamate dehydrogenase, which contains 500 amino acids.

Sunday, June 19, 2011

"சில்" என்று பெய்த மழையில் ..... "

               
 ஒரு குறுங்கதை   by VaZ
==============================

"சில்" என்று பெய்த மழையில் அந்த ஜனவரி மாத திங்கட்கிழமையில் அவளை முதலில் பார்த்தேன்.

மருத்துவக்கல்லூரியில் டிகிரி முடிந்து சில நாட்கள் போயிருந்தன.  தினமும் சென்ட்ரல் லைப்ரரி சென்று PG பரீட்சைக்காக தயார் செய்து கொண்டிருந்தேன்.  நான் தங்கி இருந்த புறா கூண்டு மான்சனில் இருந்து  7 எண் பஸ் பிடித்து மதியம் வரை படிப்பு . பின்பு தூக்கம் என சென்று கொண்டு இருந்த காலம் அது.    அன்றும் வழக்கம் போல சென்ட்ரல் லைப்ரரி செல்ல பஸ் ஸ்டாப் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.   கோவையில் பொங்கல் திருநாள் முடிந்தும் பெய்த ஸ்பெஷல் மழை.  வானம் கத்தி வைத்து கிழித்தது போல, சில்வர் அம்புகள் தரை மீது பட்டு தெறித்து, சாலையில் சின்ன சின்ன ஆறுகள் உருவாகி சாக்கடை எனும் கடலில் சங்கமிக்க ஓடும்பொழுது...  குடை கொண்டு வராததால் தலையில் கைக்குட்டை கொண்டு மூடியவாறு அந்த பஸ் ஸ்டாப் நோக்கி ஓடினேன்.   அங்கு கிடைத்த தற்காலிக பாதுகாப்பில் "ஹப்பாடா" என்று சந்தோசப்பட்டு, தலைமுடியை உதறியவாறு, திரும்பியபோது..

அந்த பெண் தென்பட்டாள்.  முகத்தை அழகாக சுருக்கியபடி வானம் எப்பொழுது தன வாய் மூடும் என பார்த்துகொண்டிருந்தாள்.  Girl next door என்று சொல்வார்களே அது போல, ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்த்தவள் போல இருந்தாள்.  சாதாரண ஒரு மஞ்சள் சுடிதாரில், பெரிய ஒப்பனைகள், நகைகள் இல்லாமல் இருந்தாள். கோதுமை நிறம்.  வசீகரமான முகம். பெய்த மழை துளிகள் சில தெறித்து அவள் மீது விழ, அவற்றை கைகளால் தடுத்து விளையாடிகொண்டிருந்தாள், ஒரு சிறு பிள்ளை போல.

அவள் சிலிர்த்து சிரித்தபோது.. அடுக்கான பற்கள் மின்னல் அடிக்க...

ரோட்டிற்கு எதிராக இருந்த டீக்கடையின் கரகரப்பான ரேடியோவில் இருந்து  "புத்தம் புது காலை பொன்னிற வேளை."  என ஜானகி தேன் குரலில் குழைய ...   மழைகாற்றின் இதமான குளிர் உடலை நனைக்க ..  அருகில் ஒரு அழகான யுவதியின் தரிசனம்.. இதைவிட ரொமாண்டிக் தருணம் என் வாழ்க்கையில் கண்டதில்லை.

அப்பொழுது முடிவு செய்தேன்.   இவள்தான் என் வருங்கால துணைவி என்று ....

என்னை பார்த்தும் பார்க்காதது போல திரும்பியவள், ஆனால் ஓரக்கண்னால் என்னை கவனிப்பது தெரிந்தது.

கைகளில் இரண்டு புத்தகங்கள், அதன் மீது ஒரு டிபன் பாக்ஸ், ஒரு சிறிய தோள்பை என்று அவள் உடைமைகள் கலைகல்லூரி மாணவி என பறை சற்றிகொண்டிருந்தன.

அப்படியே ஒரு 10 நிமிடங்கள் கழிந்தன.

மழை வலுவிழந்து தூறலாக மாறி பின் அதுவும் நின்ற பின்..

தேங்கி இருந்த நீரை வாரி இறைத்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. அவள் அதை எதிர்பார்த்தது போல பஸ் ஸ்டாப்பை விட்டு இறங்கி செல்ல...

"ஐயோ.. என் தேவதை போகிறாளே..." என மனதில் சுருக் என குத்த.. ஆனால் இன்னொரு குரல் மீண்டும் கண்டிப்பாக சந்திப்போம் என தேற்றிகொடுததது.

பஸ்ஸில் ஏறும் முன், சற்று அவள் திரும்பி பார்க்க.

என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.  பஸ் நம்பர் 17 மனதுக்குள் ஆணி அடித்த மாதிரி பதிந்தது.

அடுத்த பஸ் பிடித்து லைப்ரரி சென்று அமர்ந்ததும், புத்தகங்களை விரித்தும், மனம் அங்கு செல்லவில்லை.. அவள் முகம் மட்டும் மனக்கண்ணில் வந்து ஆடியதால்.. படிப்பை அப்படியே விட்டு விட்டு மேன்சன் வந்தது விட்டேன்.

இரவு தூக்கம் வராமல் மொட்டை மாடியில் சிகரெட் பிடித்துகொண்டு .. மெல்லிய தூறலின் நடுவே நடந்த போது, கீழே எதோ ஒரு ரூமில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் ஒலித்ததை கேட்டு மனம் மேலும் காதல் வயப்பட்டு அவளை பார்க்க ஆவலானது. எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. கல்லூரியில் பெண்கள் என்றாலே பிடிக்காத நான், சினிமாக்களில் வரும் ஹீரோ போல நடந்து கொள்கிறேனே! நடுராத்திரி வரை தூக்கம் வராமல் பின்பு அவளை நினைத்தவாறு தூங்கி போனேன்.

அடுத்த நாள். முந்தைய நாள் தாக்கம் சிறிது இருந்தாலும், மழை வீரியம் குறைவாக இருந்தது.  நேற்று வந்த நேரத்திற்கு சிறிது முன்னதாகவே வந்து பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன்.   இன்று பார்த்து சிறிது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.   காலையில்  அயர்ன் செய்த புது சட்டை பளபளக்க நின்று, அவள் வருவாளா என்று சாலையை பார்த்து கொண்டிருந்தேன்.  டீக்கடையில் வேறு " பாரதி கண்ணம்மா ஏனடி செல்லம்மா" என பாடல் ஒலித்து, மனதை வருடி கொண்டிருந்தது.   பொறுமை இல்லாமல் watch  ரோடு என மாறி மாறி பார்த்துகொண்டிருந்தேன்.   அந்த 17 எண் பஸ்சும் வந்து நின்றது.  அவளை காணவில்லை.  பஸ் மெதுவாக நகர ஆரம்பித்தது.

வரமாட்டாளோ இன்று என்று சோகம் அப்ப, முகம் வாடி திரும்பிய போது,

"ஸ்டாப் ஸ்டாப்" என கத்தியவாறு, தூரத்தில் அவள் ஓடி வந்து கொண்டிருந்தாள், நீல சுடிதாரில் மூச்சிரைக்க,  கைகள் புத்தகத்தையும் டிபன் பாக்ஸ்யையும் இறுக்கியவாறு.

(ஆஹா இது பாரதிராஜா படம் போல இருக்கிறதே என்று மனம் எண்ண..)

நெஞ்சை ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கி, திடீர் வீரனாக மாறி ஓடி சென்று . நகரும் பஸ்சின் இரும்பு முதுகை தட்டினேன் பட பட என்று..  "ஸ்டாப் ஸ்டாப். ஒரு ஆளு வராங்க" என கத்தினேன்.  பஸ் சடன் பிரேக் அடித்து நிற்க... ஓடி வந்து ஏறினாள் என் தேவதை.  படியில் இருந்து அவள் திரும்பி என்னை பார்த்து, புன்னகைத்து "தேங்க்ஸ்" என்று சொல்லிய போது.. மனம் சிட்டுகுருவியாய் மாறி பறக்க.. கண்டக்டர் என்னை திட்டிய கெட்ட வார்த்தை கூட இளையராஜா பாடல் போல இனிமையாக தோன்றியது.   பஸ் போய் மறைந்த பிறகும் "பரவாயில்லைங்க" என்று ரொம்ப நேரம் சொல்லிக்கொண்டு இருந்த என்னை ஒரு மாதிரியாக பார்த்தவாறு சென்றது ஒரு ஆன்ட்டி.

இதயத்தில் மத்தாப்பு வெடித்து சிதறி பூவாக தூவ, அன்று முழுவதும் சிரித்தவாறு இருந்தேன்.  இரவில் நீண்ட நாள் கழித்து நண்பனுடம் பீர் அடித்தேன்.

பின்பு நடந்தவை வரலாற்று பிரசித்திபெற்றவை (Rest is history என்று சொல்வார்களே!)

அடுத்த நாள் மீண்டும் பஸ் ஸ்டாப்பில் சந்தித்தோம்.  முதன் முறையாக ஹலோ சொன்னேன்.   சிரித்தாள்.  அவள் பெயர் தர்ஷினி என்று அறிந்தேன்.

அடுத்த அடுத்த சந்திப்புகள் அந்த பஸ் ஸ்டாப்பை என் சொர்க்க ஸ்டாப் ஆக்கின.  தினம் கிடைக்கும் 5 அல்லது 10 நிமிட சந்திப்புகளுக்காக நாள் முழுக்க காத்திருக்க தொடங்கினேன்.

நிறைய சிரித்தாள். கொஞ்சம் பேசினாள்.  ரொம்ப வெட்கப்பட்டாள்.

அவள் பற்றிய விபரங்கள் சின்ன சின்ன உரையாடல்கள் மூலம் கிடைத்தன.  அப்பா கலெக்டர் ஆபீசில் கிளார்க். ரொம்ப கண்டிப்பானவர்.  அம்மா வீட்டுடன் மனைவி.   ஒரு தம்பி கான்வென்டில் பத்தாம் வகுப்பு என்று அழகான மிடில் கிளாஸ் குடும்பம்.   அவளுக்கு பிடித்த நடிகர், படம், கலர், இசை, பூ, என்று கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொண்டேன். டீக்கடை பாடல்கள் தேசிய கீதம் ஆகி விட்டன. இவள் மட்டுமே என் வாழ்க்கை துணை என்று மனதில் பொறித்து விட்டேன்.

இரண்டு வாரங்கள் இப்படியே போய் விட, என் காதலை எப்படி இவளிடம் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தேன். அவளுக்கு என்னை பிடிக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரிந்தாலும், நான்தானே முதல் ஸ்டெப் எடுக்க வேண்டும்.  என்ன செய்யலாம்  என்று எண்ணி கொண்டிருந்த போது, தோதாக அடுத்த வாரம் பிப் 14 , காதலர் தினம் வந்து சேர்ந்தது.

அதற்கு முந்தைய நாள் பிப் 13, தர்ஷினியை சந்தித்த போது.....

"நாளைக்கு மீட் பண்ணலாமா ப்ளீஸ்.."

"ஐயோ.. நாளைக்கா, வேண்டாம். வீட்ல கண்டிப்பா மாட்டிக்குவேன்.  லீவ் நாள் வேற.  டிரஸ் பண்ணிட்டு கிளம்பினா அப்பாவுக்கு தெரிஞ்சிடும்."

"ஹே ப்ளீஸ், தர்ஷு, நாளைக்கு கண்டிப்பாக பார்த்தே ஆகணும். காலைல இல்லாட்டி மதியம் வா, இல்லாட்டி சாயங்காலம். எதாவது கிளாஸ் மேட் பார்க்க போறேன்னு சொல்லிட்டு வா, ஒரு மூணு நாலு மணி நேரம் ஸ்பென்ட் பண்ற மாதிரி. ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சினேன்.

"சரி. பாக்குறேன். பட் ப்ராமிஸ் எல்லாம் பண்ண முடியாதுப்பா" என்று சிணுங்கினாள்.

" ஓகே " என்ற எனக்கு அவள் கட்டாயம் நாளை வருவாள் என்று தெரியும்.

" ம். நாளைக்கு சாயங்காலம் கம்ப்யூட்டர் கிளாஸ் இருக்கு. அத வேணும்னா கட் அடிச்சிட்டு மீட் பண்ணலாம். கொஞ்சம் சீக்கிரமா 5  மணிக்கு வரேன்.   இங்கயே மீட் பண்ணலாம்  ஓகே வா?  " என்றாள்

"சரி ஓகே.  இங்க மீட் பண்ணி, வேற எங்கயாச்சும் போய்க்கலாம். 5 மணி ஷார்ப். சரியா? "

"சரி" என்று அவசரமாக வந்த பேருந்தில் ஏறி .. என்னை பார்த்து சிரித்தாள். 

அன்று சாயங்காலம் ஒரே பரபரப்பாக கழிந்தது. நண்பனிடம் மீட்டர் போட்டு கொஞ்சம் பணம் வாங்கி புது காலர் வைத்த டி ஷர்ட் வாங்கி கொண்டேன்.  Archies  கேலரி சென்றேன் (ஹப்பா.. என்ன ஒரு கூட்டம் .. நாளைக்குதான் பல பேரு காதலை சொல்றான் போல !).  ரத்த சிவப்பு நிற ஹார்ட் படம் போட்டு  I lLOVE YOU என்று அழகாக பொறித்த வழவழப்பான வாழ்த்து அட்டையை தேர்ந்து எடுத்தேன்.   ஒரு சிறிய கரடி பொம்மை (பெரிய பொம்மை விலை 500 ரூபாயாம். அடப்பாவி) ஜிகுஜிகு ஜிகினா பேப்பர் சுற்றிய பரிசு பெட்டியில் வாங்கி கொண்டேன். 

இரவு மேன்சன் ரூமில் நாளைக்கு எப்படி அவளிடம் சொல்வது என்று ஹிந்தி தமிழ் இங்கிலீஷ் என்று மாற்றி மாற்றி கண்ணாடி முன் நின்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன்.  வாழ்த்து அட்டையில் ஸ்கெட்ச் பேனா வைத்து அழகாக ஒரு கவிதை எழுதி, I love you என்று முடித்தேன். கவரில் வைத்து கவனமாக ஒட்டி வைத்து விட்டு, பரிசு பெட்டியையும் சேர்த்து வைத்து அழகு பார்த்தேன். பின் இனிப்பான கனவுகளுடன் உறங்கி போனேன்.


(நிற்க:  வாசகரே, இந்த இடத்தில கதையை முடிப்பதில் ஏற்பட்ட சிறு மனமாற்றத்தால், முதலில் தோன்றிய முடிவுடன் மற்றொரு முடிவும் சேர்ந்து விட்டது. அதனால் கதைக்கு இரண்டு முடிவுகள் இருக்கின்றன!  காதல் மற்றும் டிராமா கதை ரசிப்பவர்கள் Ending B யை படிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்படுகிறது. அது த்ரில்லர்/ஹாரர்  ரசிகர்களுக்காக!)

Ending A:

மார்ச் 15.

அந்த பஸ் ஸ்டாப் எதிரில் உள்ள டீக்கடை.

மழை ஏதும் இல்லாமல். சுள் என வெய்யில் அடித்தது. ரேடியோவில் "என் ஜீவன் பாடுது.. உன்னைத்தான் தேடுது" என பாடி கொண்டிருந்தது.

டீ மாஸ்டர் மற்றும் கடை ஓனர் பாய்லரில் வெந்நீர் பிடித்து கொண்டிருந்தார். சூடான டீயை ஆற்றி குடித்து கொண்டிருந்த அந்த பக்கத்துக்கு கடை மெக்கானிக் மாஸ்டரை நோக்கி, 

"மாஸ்டர், நானும் கேக்கனும்னே நினைச்சேன். ஒரு மாசமா நானும் பாக்கிறேன். எதுத்த பஸ் ஸ்டாப்பில் அந்த பையன் வந்து காலைல இருந்து நின்னுகிட்டே இருக்கான்.  வெறிச்சு பாத்துகிட்டே இருக்கான், கைல எதோ பெட்டி மாறி வேற வச்சிருக்கான், சாயங்காலம் ஆனா போயிடுறான். ஆள பார்த்த நல்லா படிச்சவன் மாறி தெரியறான். யாரிவன், பைத்தியமா?"

மாஸ்டர் ஒரு வித விரக்தியுடன் சொன்னார், "ஹும்ம், ஏன் கேக்குற வேலு, பைத்தியம் மாறிதான், அந்த பையன் தினமும் அங்க ஒரு பொண்ண வந்து பார்ப்பான், லவ் பண்ணினான் போல இருக்கு, காதலர் தினம் அன்னைக்கு பார்க்க வெயிட் பண்ணிட்டு இருந்திருக்கான்.  அன்னைக்குதான் இந்த பாழாய்ப்போன வெடிகுண்டு வெடிச்சது இல்ல.. அந்த பொண்ணு இவன பாக்கறதுக்கு முன்னாடி கிபிட் வாங்க காம்ப்ளெக்ஸ் போயிருக்க, அங்கயும் ஒரு குண்டு வெடிச்சதே. அதில சிதறி போய்ட்டா பாவம்.  அவன் கிட்ட எவ்வளோவோ சொல்லி பார்த்தாங்க அவன் நண்பர்கள் எல்லாம்.  அவனால அத ஜீரணிக்கவே முடியல. அதில இருந்தே தினமும் இங்க வந்து நின்னுட்டுதான் போறான்.  என்ன பண்ண எல்லாம் விதி!"

"ஒ பாவம்பா அந்த பையன், எல்லாம் நேரம்" என்று அவனை பார்த்துவிட்டு நகர்ந்தான் வேலு.

பஸ் ஸ்டாப்பில் கிப்ட் பெட்டியுடன் நின்றிருந்த இளைஞனின் கண்களில் ஒரு வெறுமை தெரிந்தது.

+++++++++++++ END +++++++++++++

http://www.rediff.com/news/1998/feb/14blast.htm

Ending B.
பிப் 15.

வானம் லேசாக மேகமூட்டமாக காணப்பட்டது.  காற்று வேறு பலமாக வீசிகொண்டிருந்தது. பஸ் ஸ்டாப் நோக்கி வேகமாக நடந்தேன். லைப்ரரி செல்ல நேரமாகி விட்டது அல்லவா...

(வெயிட். நேற்று என்ன நடந்தது என்று கேட்கறீர்களா? சுருக்கமாக  சொல்கிறேன்.  நண்பனிடன் கெஞ்சி வாங்கிய பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தேன்.   சரியாக 5 ணிக்கு வந்தாள் தர்ஷினி.  சிகப்பு நிற சுரிதாரில் ஜோராக இருந்தாள். 30  நிமிட தூரத்தில் இருக்கும் ஆனைகட்டியின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு போகலாம் என்றேன். முதலில் மறுத்தவள், நான் கெஞ்சியதும் சரி என்றாள்.  மாலை மயங்கும் நேரத்தில் ரோட்டோரத்தில் பைக்கை நிறுத்தி விட்டு காட்டிற்குள் சென்றோம்.  பயந்தவாறு வந்தாள்.  நல்லதாக ஒரு ரொமாண்டிக் ஸ்பாட் பார்த்து என் காதலை சொன்னேன். "நானும்தான்" என்று வெட்கத்துடன் ஏற்று கொண்டாள்.  என் மனம் முழுக்க சந்தோசத்துடன், கல்யாணம் பண்ணிக்கலாம்தானே என்றேன். தலையை ஆட்டினாள்.  அப்புறம் என்ன ஒன்று சேர்ந்து விடுவோம் என்றேன்.  மறுத்தாள்.  மீண்டும் கேட்டேன். முடியாது என்று கூறி, என்னை உடனே கூட்டி போ இங்கிருந்து என்றாள்.  மறுத்தேன்.  பிடிவாதம் பிடித்தாள். என் கண்களில் சிகப்பு நுரை ஒன்று படர்ந்தது (something snapped என்று கூறுவார்களே). எப்பொழுதும் கூட வைத்திருக்கும் சிறிய surgical scalpel எடுத்து, அவள் கழுத்தில் துடிக்கும் முக்கியமான ஜூகுளர் ரத்த நாளத்தை லேசாக ஒரு கீறு, அவ்வளவுதான்,  அப்புறம் அவள் சப்தம் எதுவும் போடவில்லை!  கல்லூரியில் கூட இப்படிதான் ஒருத்தி அடம் பிடித்தாள்.   அவளுக்கும் இதே கதிதானே நடந்தது.  அதனால்தானே பெண்களிடம் இருந்து ஒதுங்கி இருந்தேன்.  மீண்டும் இப்படி செய்ய வைத்துவிட்டாயே தர்ஷினி!

அடர்ந்த காட்டில் ஒரு உடலை மறைக்கவா இடம் இல்லை. மறைத்துவிட்டு, அவளுக்காக ஒரு சிறிய பிரார்த்தனை செய்து விட்டு வந்து விட்டேன்).

பஸ் ஸ்டாப் நெருங்கிய போது, அங்கே ஓர் பெண் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. ஓ, கடவுள் எனக்காக அனுப்பி வைத்த அடுத்த வாழ்க்கை துணைவியோ?  என் மனதில் சந்தோஷம் பொங்கஅவளை நெருங்கினேன்.  வேறு புறம் பார்த்து நின்று கொண்டிருந்த அவள், என்னை பார்த்து திரும்பினாள்.

வெலவெலத்து போனேன். அது தர்ஷினி! என்ன இது.. எனக்கு கண்களை நம்ப முடியவில்லை.  என்னை பார்த்து மெதுவாக அவள் சிரித்த போது, சப்தநாடியும் ஒடுங்க, வேகமாக மேன்சன் வரை ஓடியே வந்து விட்டேன்.  ரூமை திறந்து மூச்சிரைக்க.. தண்ணீர் பாட்டிலை எடுத்து மடக் மடக் என குடித்துவிட்டு திரும்பினால்..

கட்டில் மீது தர்ஷினி புன்னகையுடன் அமர்ந்திருந்தாள்.

"நீ நீ.,,செத்து போய்ட்டியே... இங்க எப்படி." பிதற்றினேன். அவள் பேசவே இல்லை. ரத்தம் உறையும் அந்த புன்னகை மட்டும்..

இப்பொழுதெல்லாம் என் கூடவே அவள் இருக்கிறாள்.  நான் எங்கு சென்றாலும்.  லைப்ரரி சென்றேன். அங்கும் வந்து என் எதிரில் அமர்கிறாள். சினிமா போனேன். அங்கும் வந்து பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்தாள்.  கடைசியில்  போலீஸ் நிலையத்தில் சென்று சரண் அடைந்தேன்.  அங்கேயும் விடுவதில்லை. Lockup-ல் இருட்டில் என் கூடவே இருக்கிறாள்.  ஓ  இதுதான் வாழ்க்கை துணை என்று தாமதமாக புரிந்தது எனக்கு!

குறிப்பு:   Ending B க்கான கதைக்களம் 1998 அல்ல என்பதை நினைவில் கொள்க.

            ++++++++++++END +++++++++++++++

Friday, June 17, 2011

Unknown - 2011 - a Quikreview by Vaz

Unknown is the new explosive action thriller based on a french novel by Didier van Cauwelaert starring Liam Neeson, Diane Kruger, Aidan Quinn among others and directed by Jaume Collet-Serra known for horror movies like House of Wax and The Orphan. Neeson stars as Dr. Martin Harris, who arrives at Berlin with his pretty wife for a biotech summit. He is involved in a road traffic accident and wakes up in a hospital with his memory jaded and able to remember only in bits and pieces. Going to the hotel where he was supposed to be staying, he finds that another man has taken his identity. Unalbe to convicne the authorities that he is the real Martin, he goes in search of who he is, is he really whom he thinks he is, with each peice of puzzle making him to question his own sanity. He has a pretty lass riding shotgun through these adventures. The film starts off with a bang and does not let go till the explosive climax. Liam Neeson starts off where he left from in A Team, Taken etc., and gives a power-packed performance and is entirely believable as the man with lost identity. Lookout for a well crafted car chase sequence in the streets of Berlin which is a real white knuckle ride. On the flip side though, the movie is a tad lengthy at 1 hour 53 minutes and fans of Bourne series may find this premise all too familiar. Otherwise, do not start watching the movie late at night, as you may not be able to switch it off before the climax!

Thursday, May 26, 2011

சின்ராசு


சின்ராசுக்கு அன்று பள்ளிக்கூடம் விடும்போதே தோன்றி விட்டது, இன்று சாயங்காலம் அந்த சம்பவம் நடந்துவிடும் என்று.

" கருப்பு சாமீ .... இன்னைக்கு பார்த்து அது ஆயிட கூடாது ... இன்னும் கொஞ்சம் தள்ளி போடு. .. கோயிலுக்கு வந்து ஒரு எலுமிச்சை பழம் வாங்கி வைக்கிறேன் " என்று அவனுக்குரிய வட்டத்தில் வேண்டி கொண்டான் .

பள்ளிகூட மணி அடித்து. எட்டாம் வகுப்பு அரை நிக்கர் போட்ட பசங்கள் எல்லாம் "ஹோய்" என கூச்சலோடு தத்தம் பைகளை தூக்கிகொண்டு புழுதி கிளப்பிக்கொண்டு ஓடினர்.   சின்ராசு இயல்பாகவே யாரிடமும் அவ்வளவாக பேசி கொள்ள மாட்டான்.  அந்த வகுப்பில் வேடிக்கை விளையாட்டு எல்லாமே சின்ராசிடம்தான்  நடக்கும்.  ஓடும்போது கால் சட்டையை இழுத்து விடுவார்கள்.  பல்லியை எடுத்து மேலே போட்டு விடுவார்கள்.  நோட்டு புத்தகத்தை ஒளித்து வைத்து விளையாடுவார்கள்.  அதனால் வகுப்பிற்கு வரவே மிகவும் பயப்படுவான் ராசு.

"டேய் ராசு. உன்ன கூட்டிட்டு போக உன் மாமா மோட்டருல வந்திருக்காருடா" என கத்தினான் ஒரு பையன்.

ராசுவிற்கு பகீர் என்றது.

எப்போதும் குதிரை வண்டியில் பக்கத்து தெரு பசங்கள் ஐந்து பேருடன் தான் போவான் ராசு.

தயக்கமாக பள்ளியின் இரும்பு கதவை விட்டு வெளியே வந்து பார்த்தான்.

மோட்டார் பைக்கில்  சாய்ந்து நின்று கொண்டு இருந்த அவன் மாமா  அவனை கண்டதும் "ராசு, வாடா, சீக்கிரம் போலாம். எல்லாரும் உன்ன பார்த்திட்டு இருக்காக.... வா .. பாட்டிக்கு ரொம்ப உடம்புக்கு முடியலடா"

ராசுவிற்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. "ஐயோ .. இன்னைக்கு பேய் கிழவிய பார்த்து தான் தீரணும் போல..." என மனதுக்குள் ஓடியது.

அவன் மோட்டாரில் ஏறி அமர்ந்து வீட்டுக்கு போவதற்குள் ....


அவன் பயத்துக்குரிய காரணத்தை பார்த்து விடுவோம்..

======================================================

ஊருக்கு ஒதுக்குபுறமாக ஒரு பண்ணை வீட்டில்தான் ராசுவின் குடும்பம் வசித்து வந்தது .. ராசுவின் தந்தை கதிர்வேலு விவசாயம் பார்த்து வந்தார்.   அம்மா கலைவாணிக்கு வீடு மட்டுமே உலகம் . அவர்களின் ஒரே மகன் ராசு.  அந்த வீட்டில் இன்னொரு நபரும் இருக்கிறார்.

அந்த நான்காவது நபர்தான் சொர்ணா பாட்டி.... அவளுக்கு ஊர் வைத்த பெயர் .........    "பேய் கிழவி "!

சொர்ணா பாட்டி அவள் சின்ன வயதில் இருந்தே மந்திர தந்திரங்களைக் கற்று வளர்ந்தவள். 

ஊரில் எதாவது பொருள் காணமல் போனாலோ .. அல்லது யாருக்காவது செய்வினை செய்ய வேண்டும் என்றாலோ ... அல்லது செய்வினை எடுக்க வேண்டும் என்றாலோ .. அவளிடம்தான் வருவார்கள் ஊர் மக்கள். ஆனால் பாட்டி மீது எல்லோருக்கும் பயம் இருந்தது. .. பில்லி சூன்யம் மற்றும் மாந்திரிக கலைகளை கேரளம் சென்று கற்று வந்தவள் என்று மக்கள் கூறுவார்கள்...

ராசுவிற்கு சின்ன வயசில் இருந்தே கிழவி என்றால் பயம்.  அவளுக்கு பார்வை வேறு கிடையாது என்று கூறுவார்கள். கிழவி வீட்டின் மேலே இருக்கும் ஒரு அறையில் தான் இருப்பாள்.  மாடிக்கு செல்லும் படிகள் தனியாக இருந்தன.  கிழவியை பார்க்க வருபவர்கள் அந்த வழியாகதான் மேல சென்று பார்த்துவிட்டு வருவார்கள்.  கிழவி கீழ வர மாட்டாள்.  சாப்பாடு கூட ராசுவின் அம்மா போய் வைத்து விட்டு வந்துவிடுவாள்.  அவளும் மாடிக்கு பயந்து பயந்துதான் போவாள் .

கதிர்வேலுவிற்கு கிழவி செய்யும் காரியங்கள் துளி கூட இஷ்டம் இல்லை.  ஆனால் வீடு மற்றும் அவர் விவசாயம் செய்யும் வயல் முதல்கொண்டு அவள் பெயரில் இருப்பதால் ஒன்றும் செய்ய இயலாமல் போனால் போகுது என்று விட்டு விட்டார்.

ராசு இதுவரை இரண்டு முறை தான் பாட்டியை பார்த்திருக்கிறான்... நினைவு தெரியாத சின்ன வயதில் .. பின்பு அவன் ஆறாவது படிக்கும்பொழுது ஒரு முறை...அது எப்படி என்றால்,

கிழவி ஏன் கீழே வர மாட்டேன் என்கிறாள் என்று ரொம்ப நாளாக அவனுக்கு ஒரு பயம் கலந்த ஆர்வம் இருந்தது.. அதுவும் பள்ளிகூடத்தில் வேறு "டே ராசு.. பேய் கிழவி என்னடா பண்ணுது.." "டேய்.. உனக்கும் மந்திரம் தெரியுமா " என்று அவனை கேலி செய்வார்கள்.

ஆதனால் எப்படியும் கிழவியை பார்த்து விட வேண்டும் என்று ஒரு நாள் அம்மா சாப்பாடு கொண்டு செல்லும் வரை பொறுத்து இருந்தான். அவள் கீழே வந்தவுடன் ... மெதுவாக மாடி படிகளை ஏறினேன்.. பழைய கால சிமெண்ட் படிகள் .. அங்கும் இங்கும் பெயர்ந்து இருக்க,.. கவனமாக ஏறி.. மேலே இருக்கும் குட்டிசுவருக்கு கீழே ஒளிந்து கொண்டு மெதுவாக எட்டி பார்த்தான்.  மாடியில் ஒரு ஒற்றை அறை மற்றும் இருந்தது.. கதவு பூட்டி இருக்க .. வெளிய தட்டில் சாப்பாடு மூடப்பட்டு ஒரு சிறிய முக்காலியில் வைக்கப்பட்டு இருந்தது.

கதவு மெதுவாக திறந்தது..

கிழவி வெளிய வந்தாள்.

சின்ராசுவின் நெஞ்சு பட பட என அடித்தது....

சிகப்பு நிற சேலையில் குள்ளமாக கருப்பு நிறத்தில் இருந்தாள்.. தலை முடி பஞ்சு போல வெளுத்து தொங்க.. முகத்தில் ஒரு பெரிய குங்கும பொட்டு வைத்து..

அந்த முகம் ..

முகம் முழுக்க அம்மை தழும்புகளுடன் தோல் சுருங்கி போய் விகாரமாக இருக்க, கண்கள் இரண்டும் கருவிழிகள் தெரியாமல் முழுதும் வெள்ளையாக இருந்தன.

ராசுவின் இதயமே நின்று விடும் போல இருந்தது.....கத்தாமல் இருப்பதற்காக கைகளை வைத்து வாயை இறுக்கமாக பொத்தி கொண்டான் ...

அதன் பிறகு ராசுவிற்கு மூன்று நாட்கள் குளிர் ஜுரம் வந்து விட்டது.  பின்பு பல நாட்கள் அவன் தூங்கவே இல்லை.  கண்ணை மூடினால் கிழவியின் அந்த கோரமான முகம் தன ஞாபகம் வந்தது.. அப்டியே தூங்கினாலும் பேய் கிழவி வந்து சிரிப்பது போலவும் .. அவனை எங்கயோ கூட்டிக்கொண்டு போவது போலவும் கொடுரமான கனவுகள் வந்தன..

அதன் பின்பு அவனுக்கு கருப்பு கோவிலுக்கு சென்று மந்திரித்து விட்டார்கள்.   பிறகு சில நாட்களில் இயல்பு நிலைக்கு மாறிவிட்டன.

அதன் பின்பு ஒரு வருடம் முன்பு .....

ஒரு நாள் அம்மா அப்பா பேசுவதை ஒளிந்து நின்று கேட்டான்.

"என்னங்க,  இந்த கிழவி என்னமோ புதுசா ஏதோ பூசை பண்ண போகுதமா?  13  அம்மாவசை பண்ணுதுன்னு ஏதோ சொல்றாங்க.. என்னங்க இது.. இதுக்கு முடிவே கிடையாதா.. எம்புட்டு நாளு இந்த கொடுமைய அனுபவிக்கணும்.. மண்டைய போடா மாட்டேங்குதே"

"இல்ல கலை.. என்ன பண்ண... இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ.. எப்படியும் நல்லது நடக்கும்.. அதுவரைக்கும் அனுபவிச்சுதான் ஆகணும். ஆத்தாக்காரி ஆகி போச்சே.. ..சொத்து வேற அது பேர்ல தான் இருக்கு.." இயலாமையில் பேசினார் கதிர்வேலு.

அதன் பிறகு விசித்திரமான சில நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தன.

இரவில் ராசு அப்பா அம்மாவுடன் தான் படுத்திருப்பான்.  அவர்கள் இருவரும் களைப்பில் சீக்கிரமே உறங்கி விடுவர். ராசு மேலே கூரையை பார்த்துக்கொண்டே பயத்துடன் படுத்திருப்பான்.. தூக்கம் வராமல் புரளுவான்... சரியாக அந்த கூரை மேலேதான் கிழவியின் அறை.

ஒரு நாள் (மூன்று மதங்களுக்கு முன்பு).

வழக்கம் போல விழித்துக்கொண்டு படுத்திருந்தான் ராசு. அப்பொழுது மாடியில் ஒரு சப்தம் கேட்டது..

தம் தம் தம் .......

காதை கூர்மை ஆக்கி கொண்டு ராசு கேட்க

யாரோ வட்டம் அடித்து ஓடுவது போல அந்த சப்தம் சுற்றி சுற்றி வந்ததது..

ராசு போர்வையில் முகத்தின் மேல போர்த்திக்கொண்டு நடுக்கமாக படுத்துக்கொண்டான்..

ஜல் ஜல் என சலங்கை ஓசை வேறு கேட்க..

ராசு அப்பாவை எழுப்ப பார்க்க.. அவரோ இருந்த களைப்பில் குறட்டை விட்டு தூங்கிகொண்டிருந்தார்..

பின் கிழவி ஏதோ மந்திரம் சொல்வது போல குரல் எழுந்தது..

அதன் பிறகு ரத்தத்தை உறைய செய்யும் ஒரு சிரிப்பொலி கேட்டது ...ஆணா பெண்ணா என இனம் பிரிக்க முடியாத  ஒரு குரல். 

ராசுவிற்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது.  ராசு அன்று தூங்கவே இல்லை..

பின் வரும் இரவுகளில் அந்த நிகழ்வுகள் இன்னும் மோசமாக ஆரம்பித்தது..

வினோதமான சப்தங்களும், உறுமல்களும் அழுகுரல்களும் கேட்டு கொண்டே இருந்தன.

ராசு அம்மா அப்பாவிடம் அதை பற்றி கூறியும், அவர்களால் ஒன்று செய்ய இயலாமல் தவித்தார்கள்.

பின்பு ஒரு நாள் திடீர் என சப்தம் கேட்பது நின்று போக  ... அமைதியாக கழிந்தன சில இரவுகள்.

அடுத்த நாள் அப்பா அம்மாவிடம் சொல்லுவதை கேட்க நேர்ந்தது சின்ராசுவிற்கு,,,,

"கலை.. கிழவிக்கு ரொம்ப உடம்பு முடியல .. படுத்துட்டே இருக்கு..  "

"ஆமாங்க.. நான் போய் வச்ச சோறு கூட அப்படியே இருக்கு..  உள்ள போக பயமா இருக்கு. "

"நான் போய் பாத்துட்டு வந்தேன்.. பேச முடில.. வைத்தியர கூட்டீயறேன் புள்ள ..."

கதிர்வேலு சைக்கிளில் சென்று வைத்தியரை கூட்டி வர.  இருவரும் மேலே செல்வதை ஒளிந்து இருந்து பார்த்தான் ராசு.

பின் சிறிது நேரம் கழித்து வைத்தியரும் அவன் அப்பாவும் அம்மாவும் பேசுவதை கேட்டான்..

"ரெண்டு மூணு நாளுக்கு மேல தாங்காதுங்க ..சொல்றவங்களுக்கு சொல்லிடுங்க. " என்றார் வைத்தியர்..

அவர் போன பிறகு...

"கலை.. என்ன பண்ணலாம்? கிழவி போய்டும் போல இருக்கு."

"அப்பாடி.. நான் கும்புடுற தெய்வம் கை விடல.. நம்ம பட்ட கஷ்டமெல்லாம் போகட்டும்.. நிம்மதியா போய் சேரட்டும் .. ஊருக்குள்ள போக முடில...வீட்டுக்கு கூட யாரும் வர பயப்படறாங்க...."

" ம்ம் என்ன பண்ண .. எனக்கு சந்தோசமாவும் இருக்கு .. ஆனா பெத்துபோட்ட கிழவி ஆச்சே.. அதன் கொஞ்சம் கலக்கம்.. "

ராசுவிற்கு இதை கேட்டதும் மிகவும் சந்தோசமாக இருந்தது.

"சரி அப்போ நம்ம சனத்துக்கெல்லாம் சொல்லிரலாமா..." கேட்டாள் கலை.

"எவன் வருவான் வீட்டுக்கு?  கிழவி செத்தாலும் யாரும் வர மாட்டாங்க.  அப்படி பயப்படுத்தி வச்சிருக்கு. உன் தம்பி குடும்பம் மட்டும்தான் நமக்கு இப்போதைக்கு சொந்தம். அவங்ககிட்ட சொல்லிடு. "  என்றார் கதிர்வேலு.

"அம்மாடி .. பேய் கிழவி தொல்லை ஒரு வழியா ஒழிஞ்சுடும் போல இருக்கு" என்று அவன் நினைத்து முடிப்பதற்குள் அந்த அதிர்ச்சி நடந்தது.

கதிர்வேலு "ஆனா பாரு கலை.. கிழவி கீழ வந்ததே இல்ல.. ராசு பொறந்ததுல இருந்து அவன ஒரு தடவதான் தூக்கி பாத்திருக்கு.. ஆனா ராசு ராசு ன்னு மட்டும் முனங்குது ..சாகறதுக்கு முன்னாடி ஏதோ சொல்ல நினைக்குது போல.. " என்றார்..

" ஏங்க.. ஏற்கனவே அவன் அத பார்த்துட்டு  பயந்து போய் இருக்கான் .. வேணாங்க... "

"இல்ல கலை.. கடைசியா கேட்டுச்சுன்னு வைய்யு. அத நிறைவேத்தாம விட்டோம்னா... கிழவி சாபம் விட்டாலும் விட்டுடும்.. எதுக்கு வம்பு. "

ராசுவிற்கு இதயம் ஒரு முறை நின்று துடித்தது..

"ஐயோ.. இன்னொரு தடவை அந்த கிழவி முகத்தை பாத்துபுட்டா அம்புட்டுதான். இனி தூங்கவே முடியாதே. சாமி.தயவு செஞ்சு நான் பள்ளிகொடம் போகும்போதே கிழவிய கூட்டிகிட்டு போய்டப்பா.." என வேண்டி கொண்டான்.

அடுத்த இரண்டு நாட்கள் தப்பித்து விட்டான்.

அதற்கு அடுத்த நாள்...

================================================


மோட்டாரில் போகும்போது ராசுவின் மனம் திடுக் திடுக் என அடித்துகொண்டது.  "ஐயோ சாமி . என் கூட இருந்து காப்பாத்து" என மனமுருக வேண்டிகொண்டான்.

தட தட என குலுங்கி சென்ற வண்டி அவன் வீட்டை நெருங்கி ஒரு வட்டம் அடித்து நின்றது..

"இறங்கு ராசு.. " என்றார் அவன் மாமா.

வீட்டின் முன் கதிர்வேலுவும் கலையும் மற்றும் அவன் அத்தையும் நின்று கொண்டிருந்தனர்.  அனைவர் முகத்திலும் ஒரு போலியான சோகம் அப்பி இருக்க...

ராசு மெதுவாக மோட்டாரில் இருந்து இறங்கினான்.

"ராசு.. வாடா.. பாட்டிக்கு ரொம்ப முடிலப்பா.. கடைசியா ஒரு தடவ உன்ன பாக்க ஆசைப்படுது. வா ராசா " என்றார் கதிர்வேலு.

"மாட்டேன் மாட்டேன்.. எனக்கு பயமா இருக்கு... அம்மா " என்று கலைவாணியிடம் சென்று ஒட்டி கொண்டான் ராசு.

"டேய் பாவம் பாட்டி . வா நாங்க கூட வாரோம்"  என்று அவனை மெதுவாக தள்ளி கொண்டு மாடிப்படி அருகில் சென்றனர் அனைவரும்.

"ம்ம்ம் ம்ம்ம் " என்று தலை ஆட்டியபடி சென்ற ராசுவை  இறுக்கமாக கையை பிடித்து இருந்தாள் அம்மா கலை.

அந்த மாடிப்படி ஒவ்வொன்றாக ஏற ஏற ... ராசுவின் இதயத்துடிப்பும் எகிறியது. .. மேல இருந்த அறை மெதுவாக அவன் கண்களுக்கு தென்பட்டது.. ஒரு சிங்கத்தின் குகை போல அது தெரிந்தது.

ஒரு வழியாக அந்த முடிவடையாத மாடிப்படி பயணம் முடிவுற்று.. ...

அந்த அறை தெரிந்தது.  அறை கதவு திறந்து இருக்க...

"வா ராசு. வா.. பாட்டி உள்ளாரதான் இருக்கு." என விடாபிடியாக கலை அவனை இழுக்க, கால்கள் தேய்ந்துகொண்டே அறைக்குள் கொண்டுவரப்பட்டான். 

உள்ளே....

அதை அறை என்று சொல்வதை விட குகை போல இருந்தது..

விசித்திரமான் பல பொருட்கள் அங்கும் இங்கும் இறைந்து கிடந்தன.. பூஜைக்கு பயன்படும் பூக்கள் முதற்கொண்டு, தேங்காய், காய்ந்த மாலைகள், கனிகள் என சிதறி கிடந்தன. சில அடுக்குகளில் கண்ணாடி குப்பிகளில் பல வண்ணங்களில் திரவ பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. சுவர்களில் கொடுரமான பெயர் தெரியாத கடவுள் படங்கள் தொங்கி கொண்டிருந்தன. மற்றும் ஆணி அடித்து அதில் வண்ண கயிறுகள் தொங்க விடப்பட்டிருந்தன.

அறையின் ஓரத்தில், தரையில் சுண்ணாம்பால் ஒரு சிறிய வட்டம் இடப்பட்டு அதில் ஒரு மண்டை ஓடு மட்டும் இருந்தது.

அதை பார்த்ததும் ராசுவிற்கு தலை சுற்ற ஆரம்பித்தது ....

அறையின் நடுவில் .....

ஒரு கயற்று கட்டில் போடப்பட்டு .. அதில்

பேய்க் கிழவி எனும் சொர்ணா பாட்டி படுத்து இருந்தாள்.

ராசு கண்களை இருக்க மூடி கொண்டவன்.. மெதுவாக திறந்து பார்க்க..

இரண்டு வருடம் முன்பு பார்த்ததிற்கு இபொழுது மிகவும் இளைத்து போய் இருக்க.  கை கால்கள் எலும்பும் தோலுமாக தெரிய.

அந்த முகம் ...

சுருக்கங்கள் இன்னும் அதிகமாகி.. தலை மயிர் கொட்டி போய்... தழும்புகள் மட்டும் பிரதானமாக தெரிய.. கண்கள் நல்ல வேளையாக மூடி இருந்தன.

மூச்சு லேசாக வந்து கொண்டிருக்க. நெஞ்சு மெதுவாக மேல கீழே இறங்கி கொண்டிருந்தது.

கதிர்வேலு உடனே  "ஆத்தா, பாரு ராசு வந்திருக்கான்.. கூட்டியார சொன்னியே, பாரு ஆத்தா" என சோகம் கலந்த குரலில் சொல்ல..

கிழவியின் கண்கள் மெதுவாக திறந்தன.

கருவிழிகள் இல்லாமல் வெள்ளையாக இருந்த கண்கள் அங்கும் இங்கும் விழித்தன.

"ராசு ராசு ...."

"இங்க இருக்கான் பாரு ஆத்தா." என்று ராசுவை இழுத்து கலை முன்னால் விட ....

கிழவியின் கைகள் நீண்டு ராசுவின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள .....

ராசு இழுக்க பார்த்தும் முடியவில்லை.....வியர்த்து ஒழுகியது அவனுக்கு..

"ராசு.. பாட்டி உன்ன பார்த்ததே இல்லப்பா.. பாட்டிக்குதான் கண்ணு தெரியாதே.. " என ஒரு கட்டை குரல் கிழவியின் தொண்டையில் இருந்து வந்தது.. குரல் நடுக்கமாக இருந்தாலும் மட்டும் மிகவும் கம்பீரமாக இருந்தது.

"ஆத்தா ராசுவ நல்லா ஆசிர்வாதம் பண்ணு ..நல்லபடியா படிச்சு முன்னேறட்டும்.. " என்றார் கதிர்வேலு.

"சரி கதிரு. நீங்க ரெண்டு பெரும் வெளிய இருக்கியளா.. நான் அவனுக்கு மந்திரிச்சு விடணும்.. " என்று கிழவி நடுக்கமான குரலில் சொல்ல..

ராசுவிற்கு பகீர் என்று உரைக்க..

"ஆத்தா அது வந்து ... அவன் ரொம்ப பயப்படறான்" என கதிர்வேலு இழுத்தார்.

"ம்ம்ம் என்னது.. ?" என்ற கிழவி ஒரு முறை முறைத்தாள்.

"சரி ஆத்தா.. கலை, வா புள்ள நாம கொஞ்சம் வெளிய இருப்போம்" கதிர்வேலு தயக்கமாக கலையுடன் மெதுவாக வெளியே சென்றார்.

ராசு "அப்பா அப்பா.." என கத்தியும் கிழவியின் பிடி இரும்பு பிடியாக இறுக, செய்வது அறியாமல் கண்களை இறுக்கமாக மூடி கொண்டான்..

"ராசு பயப்படாதே.  என்ன பாரு ராசா.. " என்ற கிழவியின் குரலில் இப்பொழுது நடுக்கம் இல்லை..

ராசு மெதுவாக கண்களை திறந்து பார்க்க. கிழவியின் வெளுத்த கண்கள் இப்பொழுது அவனையே பார்ப்பது போல நிலைகுத்தி நின்றன.. அவளிடம் இப்பொழுது ஒரு புத்துணர்வு வந்து இருந்தது.. அந்த வெளுத்த கண்களில் ஒரு பச்சை ஒளி மிளிர்ந்து மறைந்தது.

"பாட்டி.. என்ன விடு. .நான் போணும்... " என்று அழாக்குறையாக கெஞ்சினான்.

"ராசா.. எங்க போற ..நீ இனி எங்கயும் போக முடியாது.. என்னோட மட்டும்தான் இருப்ப..." என்று கிழவி சிரித்தபோது, முன்வரிசையில் பல பற்கள் காணாமல் போய் இரண்டு மூன்று பற்கள் மட்டும் கறையோடு இருந்தன.

"விடு விடு. என்ன .. என்ன சொல்ற நீ... அம்மா " என கத்தினான் ராசு..

கிழவி முகம் இறுகி,

"ஆமா ராசு.. நான் சொல்றத நல்லா கேளு.. எனக்கு சாவே கிடையாது. 13 அம்மாவசை துர்தேவதைகளுக்கு பூச பண்ணி ரத்த காவு கொடுத்துட்டேன். இனி 200  வருஷம் என் ஆன்மா உயிரோட  இருக்கும். ஆனா  பாழப்போன இந்த உடம்பு தாங்காது ராசா.. அதனால...."

இப்போது கிழவியின் கண்கள் அவனை உற்று நோக்குவது போல தோன்ற.. திடீர் என மந்திரத்தில் கட்டுண்டது போல ராசு சமைந்து நின்றான்..

பச்சை ஒளி ஒரு கீற்று போல கண்களில் இருந்து கிளம்பியது...

=====================================


உள்ளே ஏதோ சப்தம் கேட்டதும் பதறி போய்  கதிர்வேலுவும் கலையும் ஓடி வந்து 
பார்த்த போது,  அங்கே....

கட்டிலில் கிழவியின் உடல் தளர்ந்து போய் கிடந்தது.. தலை தோய்ந்து போய் கிடக்க..

"ஆத்தா போய்ட்டியே" என்று கதிர்வேலு அழ தொடங்கினார். கலையும் அதில் கலந்து கொண்டாள்.

ஓரமாக நின்ற ராசுவை அவர்கள் கவனிக்கவில்லை..

அவன் தரையை பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தான்

அவன் உதட்டில் ஒரு புன்னகை ஒட்டி இருந்தது.. .

கண்களில் ஒரு பச்சை ஒளி மிளிர்ந்து மறைந்தது ..

சின்ராசு இனி எதற்கும் பயப்பட மாட்டான்!!




===========================நிறைவு===========================

( ஒரு குறுங்கதை  by Vazzy )