Tuesday, March 8, 2011

பேச்சி - ஒரு குறுங்கதை

பேச்சி - ஒரு குறுங்கதை
----------------------------------------------------------------


கோவையை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சீறி கொண்டிருந்தது அந்த செவ்ரோலேட் கார்.  இரவு மணி 1230 என்பதால் இருள் அப்பி இருந்தது.  காரின் Headlight  வெளிச்சம் இருட்டை கிழிக்க போரடிகொண்டிருந்தது.   காருக்குள்ளே சூர்யா உதட்டோரத்தில்  சிகரட் தொங்க ஸ்டீரிங்கை ஒரு கையால் அலட்சியமாக சுழற்றி கொண்டிருந்தான்.  அருகில் அருண் சிறிது யோசனையாக அமர்திருந்தான்.   ஸ்டீரியோவில் ஜானகி "ஊரு சனம் தூங்கியதாக" ஹஸ்கியாக பாடிகொண்டிருந்தார்.   இருவரும் அருணின்  Farmhouse ல் இருந்து weekend  கொண்டாட்டத்திற்கு பிறகு திரும்பி கொண்டிருந்தனர்.

"டேய் சூர்யா. Farmhouse  ல இருந்து காலைல வந்திருக்கலாம்ட.. இப்போ பாரு அம்மாவாசை ராத்திரி.. " என்றன் அருண்.

"போடா, நாளைக்கு காலைல ஷிப்ட்கு போகாட்டி அந்த TL நாய் மாறி கத்துவான்.. ஏன்டா உனக்கு என்ன பயமா இருக்கா?" என்று ரோட்டில் இருந்த பார்வை எடுக்காமல் பேசினான் சூர்யா.

"இல்லடா, இப்போ நம்ம தாண்ட போற ஊருல ஒரு urban legend இருக்குடா... யாரும் நைட் வெளியே வரமாட்டாங்க அதுவும் இன்னைக்கு .. அதான் அம்மாவாசை அன்னைக்கு..." சற்று தயங்கித்தான் பேசினான் அருண்.

"என்னடா .. கதை சொல்ற.. விளக்கமா சொல்லு "

"இல்லை சூர்யா.. இந்த ஊருல பல வருடங்களுக்கு முன்னாடி ஓர்ு ஏழை பொண்ணு ..பேரு பேச்சி ..அவ ஜமிந்தார் வீட்டு பையன காதல் பண்ணிருக்கா.  அவனும்தான். ஆனா அவங்க குடும்பத்துல இது தெரிஞ்சவிடனே அந்த பொண்ண ஊருக்கு முன்னாடி கல்லால அடிச்சு கொன்னுட்டங்கடா.  அதுக்கப்புறம் அவ ஆத்மா அம்மாவாசை அன்னைக்கு உலவுதுன்னும் .. அப்ப அவ கண்ணுல படர ஆண்கள் கல்லா சமஞ்சு போயடுவங்கன்னும் ஒரு நம்பிக்கை.  அதனால யாரும் வெளிய வர மாட்டங்க பா." சொல்லி முடித்தான் அருண்.

" ஹஹஅஹா so funny man . ஏன்டா Clash of the Titans பாத்துட்டு Medusa கதைய எடுத்து பேச்சி கல்லு அது இதுன்னு புருட விடற... அப்படி இருந்த இந்த ஊர்ல வீடு கட்ட கல்லுக்கு பஞ்சமே இல்லடா ... "  சிரிதிதபடி புகையை ஊதினான் சூர்யா.

" இல்லடா  மச்சி , இது சின்ன வயசுல இருந்த நான் கேட்ட கதை.. நாங்க Farmhouse போன கூட அன்னைக்கு சீக்கிரம் திரும்பிடுவோம்; அதுவும் அம்மாவசைனா சான்ஸ் எ  இல்லடா "

" போடா.. அப்டி பேச்சி வந்த பார்த்துட்டே போலாம்.. கூட ஒரு போடோ எடுக்கணும் ..செல்போன்ல கேமரா இருக்குல்ல"  ஏளனமாக சொன்னான் சூர்யா.

அப்போது கார் பொன்னேட்டில் இருந்து எதோ சப்தம் வந்தது....

அடுத்து .......

"என்னடா ஆச்சு " பதைபதைப்புடன் கேட்டான் அருண்.

" தெரியலடா.. last week தான் சர்வீஸ் போயிட்டு வந்தது.. இரு நிறுத்தி பாக்கிறேன்" இது சூர்யா..

காருக்குள் இருந்த சப்தம் " கடக் கடக் " என அதிகமாக கேட்க..

"டே வேண்டாண்டா.. கார இங்க நிறுத்தாதே.. ப்ளீஸ்.."  கெஞ்சும் தொனியில் அருண் சொல்ல

" போடா . .. அப்படியே  ஓட்டுனா எதாவது பிரச்சனை ஆயுடும்" என்ற சூர்யா ... காரை ஸ்லோ செய்து ரோட்டோரமாக நிறுத்தினான்..

"ஐயோ.. டேய் சீக்கிரம் பாரு .. நினைச்சேன் கிளம்பம்போதே ஏதாவது  ஆகும்னு... சீக்கிரம் பாருடா"

"இருடா புலம்பாம.. ஒக்க நிமிஷம் "  என்று இறங்கிய  சூர்யா, சிகரெட்டை விசிறி விட்டு,  கார் முன் சென்று Bonnet திறக்க,  அது பிளந்து நிற்க,, உள்ளே குனிந்து பார்க்க முற்பட்டான் டார்ச் ஒளியில் . ..

அருண் இருப்பு கொள்ளாமல் நெளிந்து .. பயத்துடன்  சுற்றும் முற்றும் பார்க்க... இருள் எங்கும் வியாபித்திருந்தது.. கண்களைக் கசக்கி பார்த்ததில் தூரத்தில் வயல்வெளிகள் .. நடுவில் ஒரு சின்ன மின்விளக்கு தெரிய... பூச்சிகளின் ரீங்காரம் கேட்டது.. கார் ஸ்டீரியோவில் இப்பொது "வெட்ட வெளி பொட்டலிலே " என்று கானம் ஒலிக்க.."ஐயோ இது வேற " டக்கென்று ஆப் செய்தான் அருண்.  நிசப்தம்.

"பேட்டேரி வயர் லூஸ் ஆய்டுச்சு போலடா.. டைட் பண்ணிட்டேன்...: ரெடி போலாம் " என்று போனெட் மூடினான் சூர்யா.

"சரி... சரி வாடா போலாம் ... பாஸ்ட்"  பரிதவிப்புடன் அருண் சொல்ல..

" ஹஹா ..ஏன்டா உன் பேச்சிக்கு ஒரு ஹாய் சொல்லலாம்னு பார்த்தா முடியாது போல "  என்றவாறு ஏறி அமர்ந்தான் சூர்யா.

சாவியை திருக, மென்மையான உறுமலுடன் என்ஜின் பற்றிக்கொண்டது..ஹை பீம் சுவிட்சை தட்டினான் சூர்யா...

இருட்டை கிழித்து பாய்ந்த halogen ஒளியில்........

அரூபமாக புகை போன்று ஒரு உருவம் தெரிய...

"ஹே வாட் இஸ் தட்? " என்று கூர்ந்து நோக்க முயன்றான் சூர்யன்...fa

அருண் திகில் உடன் "வேண்டாம் பார்க்காத" என அலற..

நெருப்பு பிழம்புகள் போல இரு கண்கள் இருட்டில் இருந்து தென்பட .....

ஆஆஆஆஆஆஆஆஆஅ .............

மறுநாள் தினத்தந்தி பக்கம் 8
"கோவை பாலக்காடு நெடுஞ்சாலையில் அனாதையாக நின்றுகொண்டிருந்த காருக்குள் இரு கற்சிலைகள் இருந்தன.  போலீசார் இது சிற்பம் கடத்தும் கும்பல் கைவரிசையோ என தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  மேலும.......

+++++++++++++++++++++++++++++++++END+++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment